தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.53.72 லட்சம் பணம், பொருள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19ம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற, மாதிரி நடத்தை விதி அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 1,650 பறக்கும் படையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 29ம் தேதி வரை ரூ.40,40,831 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 15 லேப்டாப்கள், 40 மொபைல் போன்கள், 19 துண்டுகள், 140 பித்தளை குத்து விளக்குகள் என ரூ.12,57,080 மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 74,090 மதிப்பிலான மதுபான பாட்டில்கள் என ரூ.53,72,001 பணம் , பொருட்கள்  கைப்பற்றப்பட்டுள்ளது.    …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு