தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: கொளத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவருடன் சேர்த்து பிரதான கட்சிகள் உள்ளிட்ட சுயேச்சைகள் என 36 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் ஜெகதீஷ் குமார் போட்டியிடுகிறார். மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரத்தில் 5 அல்லது 6 வது இடத்தில் இருக்கும் என்று அக்கட்சியினர் எதிர்ப்பார்த்தனர். ஆனால் இறுதி  வேட்பாளர் பட்டியல் வரிசையில் அக் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் குமார் பெயர் விதிமுறைக்கு புறம்பாக 16வது இடத்தில் வைத்திருப்பதாக கூறி அது குறித்து விளக்கம் கேட்க மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் நேற்று மாலை கொளத்தூர்  சட்டமன்ற தேர்தல் அலுவலகத்தில் கூடினர். இதில், 50 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பிற்கு அயனாவரம் போலீஸ்  உதவி கமிஷனர் ஸ்ரீனிவாசன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் கொளத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் தகுந்த பதில் கிடைக்காததால் அதிகாரிகளை கண்டித்து நீதி வேண்டும், நியாயம் வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். முறைப்படி அனுமதி பெற்று பிரச்சாரம்  செய்யும் போது சோதனை என்ற பெயரில் தடுக்கின்றனர் என குற்றம் சாட்டினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்பு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ள பட்டியலே இறுதியானது என்று கூறியதால் மக்கள் நிதி மையத்தை சேர்ந்த வேட்பாளர் உட்பட நிர்வாகிகள்  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு