தேர்தல் தொடர்பான வாகன தணிக்கை செய்ய சாத்தான்குளம் பகுதியில் 2 இடங்களில் சோதனை சாவடி

சாத்தான்குளம், பிப்.20: சாத்தான்குளம் பகுதியில் தேர்தல் தொடர்பான வாகன தணிக்கை செய்ய இரு இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அனுமதியின்றி பொருள்கள் மற்றும் பணம் கொண்டு செல்லப்படுவது கண்காணிக்கப்படும். தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சாத்தான்குளம் கருமேனி ஆற்று பாலம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர், விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் சாத்தான்குளம் காவல் சரகத்துக்குட்பட்ட தூத்துக்குடி மாவட்ட எல்லைகளில் இரு இடங்களில் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு