தேர்தல் சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தை பாஜ ஆட்சி சீரழிக்கிறது: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கீழ்வேளூர்: நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வெண்மணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 53ம் ஆண்டு வெண்மணி தியாகிகள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்காமல் அவசர அவசரமாக தேர்தல் சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அந்த சட்டத்திற்கு திருத்தங்கள் கொடுக்க கூட அனுமதிக்காமல் நாட்டின் உயர்ந்த ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்திலேயே ஜனநாயகத்தை சீரழிக்கும் ஆட்சியாக பாஜக ஆட்சி திகழ்கிறது. இனிமேல் மோடி அரசிற்கு தோல்வி முகம் தான். தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசு, ஒரு ரூபாய் கூட கொடுக்க மறுக்கிறது என்றார்….

Related posts

உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கே காரணம்: செல்வப்பெருந்தகை

சொல்லிட்டாங்க…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக யாரும் செயல்படக்கூடாது: அதிமுகவினருக்கு எடப்பாடி ரகசிய உத்தரவு