தேர்தல் கொண்டாட்டத்திற்கு தயாரான மக்கள் யாரு ஜெயிச்சாலும் ‘லட்டு’ உண்டு: தோற்ற வேட்பாளரின் முன்பணம் ‘ரிட்டன்’

லூதியானா: பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், அந்த மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. முக்கிய நகரங்களில் உள்ள இனிப்புக் கடை உரிமையாளர்கள், விடிய விடிய இனிப்புகளை தயாரித்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஸ்வீட் ஆர்டர்களை அதிகளவில் கொடுத்துள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் மாநிலம் பஞ்சாப் ஹல்வாய் சங்கத்தின் தலைவர் நரிந்தர்பால் சிங் பப்பு கூறுகையில், ‘இம்முறை வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு 5 கிலோ ஜீத் கா லட்டு கொடுக்க உள்ளோம். பல்வேறு வகையான ரக லட்டுகளை விடிய விடிய தயார் செய்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முன்கூட்டியே இனிப்புகள் ஆர்டர்கள் பெறப்படும். இந்த முறை அதிகளவு ஆர்டர்கள் குவிந்துள்ளன. கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலின் போது சுமார் 6 குவிண்டால் அளவிற்கு இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டது. இந்த முறை 8 குவிண்டால்களுக்கு மேல் ஆர்டர்கள் கிடைத்துள்ளன. வெற்றி பெறும் அரசியல் கட்சிகளைப் போலவே, எங்களுக்கும் தேர்தல் வெற்றி என்பது கொண்டாட்டம்தான். ஆர்டர் செய்த வேட்பாளரில், யாரேனும் தோற்றால் அவர்கள் முன்பணத்தை திருப்பி கொடுத்து விடுவோம். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், உலர் பழங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களை கொண்டு தயாரித்துள்ளோம். இனிப்பு வகைகளின் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி உள்ளோம். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்குப் பிறகு, இந்த ஆண்டு நல்ல வியாபாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு ஒரு டின்னுக்கு (15 கிலோ) சுமார் ₹1,200 ஆக இருந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை, இப்போது சுமார் ₹2,700 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் வர்த்தக காஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இனிப்பு தயாரிப்புக்கான இடுபொருள் செலவு அதிகரித்துள்ளதால், விலையை கொஞ்சம் உயர்த்தி உள்ளோம்’ என்றார். …

Related posts

இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு

சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்: கர்நாடக அமைச்சர் தினேஷ்குண்டுராவ் பேச்சு

நவராத்திரி விழாவை முன்னிட்டு உச்ச நீதிமன்ற கேண்டீனில் அசைவத்திற்கு தடை: வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு