Saturday, July 6, 2024
Home » தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்போர் 64,152 பேர் சென்னையில் 40.57 லட்சம் வாக்காளர்கள்: இறுதி பட்டியலை வெளியிட்டார் மாநகராட்சி ஆணையர்

தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்போர் 64,152 பேர் சென்னையில் 40.57 லட்சம் வாக்காளர்கள்: இறுதி பட்டியலை வெளியிட்டார் மாநகராட்சி ஆணையர்

by kannappan

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டார். இதன்படி சென்னையில் மொத்த வாக்காளர்கள் 40.57 லட்சம் ஆகும். சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அனைத்து அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். இதில் அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் கலந்து கொண்டனர். இந்த இறுதி வாக்காளர் பட்டியலின் படி சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 40,57,360 பேர். இதில் ஆண்கள் 19,95,581 பேர், பெண்கள் 20,60,698 பேர். மாற்றுத்திறனாளிகள் 7,023 பேர். 18 முதல் 19 வயது வரை உள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் 64,152 பேர். இந்த வாக்காளர் பட்டியலின்படி துறைமுகம் தொகுதியில் குறைந்த பட்ச வாக்காளர்களும், பெரம்பூர் தொகுதியில் அதிகபட்ச வாக்காளர்களும் உள்ளனர். இதன்படி துறைமுகத்தில் 1,76,272 வாக்காளர்களும், பெரம்பூரில் 3,15,208 வாக்காளர்களும் உள்ளனர். கடந்த நவம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்ட வரைவுவாக்காளர் பட்டியலை விட இறுதி வாக்காளர் பட்டியலில் 1,16,656 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.இரட்டிப்பான வாக்கு பதிவு மையங்கள்சென்னை மாநகராட்சி ஆணையர்  பிரகாஷ் அளித்த பேட்டியில், ”ஒரு வாக்குசாவடி மையத்தில் அதிகபட்ச  வாக்காளர்கள் எண்ணிக்கை 1,200 ஆக இருந்த நிலையில் தற்போது அதை 1000 வா  குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற  தொகுதிகளில் 3754 ஆக இருந்த வாக்குசாவடிகளின் எண்ணிக்கை தற்போது கொரோனா  காலம் என்பதால் 6178 ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார். 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 17,30, 117 ஆண் வாக்காளர்களும் 17, 67, 940 பெண் வாக்காளர்களும் திருநங்கைகள் 772 பேர் உள்பட மொத்தம் 34, 98 829 வாக்காளர்கள் உள்ளனர்.வாக்குச்சாவடி கும்மிடிப்பூண்டியில் 330, பொன்னேரியில் 310, திருத்தணியில் 329, திருவள்ளூரில் 296, பூவிருந்தவல்லியில் 387, ஆவடியில் 427, மதுரவாயலில் 421, அம்பத்தூரில் 349, மாதவரத்தில் 467, திருவெற்றியூரில் 306 ஆக மொத்தம் 3622 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.தொகுதி    ஆண்கள்    பெண்கள்    திருநங்கைகள்    மொத்தம்கும்மிடிப்பூண்டி    1,37,27    1,43,708    41    2, 80,776பொன்னேரி(தனி)    1,30,689    1,36,953    31    2,67,673திருத்தணி        1,41,923    1,48,501    28    2,90,452திருவள்ளூர்    1,33,608    1,41,055    26    2,74,689 பூந்தமல்லி(தனி)    1,75,953    1,81,861    60    3,57,874ஆவடி        2,18,538    2,21,369    98              4,40,005மதுரவாயல்    2,26,245    2,22,464    142    4,48,851அம்பத்தூர்        1,91,502    1,91,418    95    3,83,015மாதவரம்        2,24,323    2,26,288    106    4,50,717திருவொற்றியூர்    1,50,309    1,54,232    145    3,04,777காஞ்சிபுரம் மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,41,462 ஆண்கள், 6,73,685 பெண்கள், திருநங்கைகள் 182 பேர்  என மொத்தம் 13,15,329 வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர்கள் பட்டியல் விவரம்தொகுதி    ஆண்    பெண்    இதர    மொத்தம்ஆலந்தூர்        1,92,854    1,96,921    82               3,89,857ஸ்ரீபெரும்புதூர் (தனி)    1,74,186    1,83,194    53    3,57,433உத்திரமேரூர்    1,25,347    1,34,252    34    2,59,633காஞ்சிபுரம்        1,49,075    1,59,318    13    3,08,406செங்கல்பட்டு வாக்காளர் விவரம்செங்கல்பட்டு மாவட்டத்தில் 13,01,999 ஆண்கள், 13,19,702 பெண்கள்,  திருநங்கைகள் 325 பேர் என மொத்த 26,22,026 வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர்கள் பட்டியல் விவரம்தொகுதி    ஆண்    பெண்    இதர    மொத்தம்செங்கல்பட்டு    2,05,490    2,11,995    52    41,7537திருப்போரூர்    1,39,449    1,44,620    29    284098செய்யூர் (தனி)    1,09,504    1,12,509     29    2,22,042மதுராந்தகம் (தனி)    1,10,366    1,13,482    46    2,23,894சோழிங்கநல்லூர்         3,29,420    3,25,858    88    6,55,366பல்லாவரம்    2,09,885    2,11,710    35    4,21,630தாம்பரம்        1,97,885    1,99,528    46    3,97,459…

You may also like

Leave a Comment

20 − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi