தேர்தலில் தோல்வி அடைந்ததால் விரக்தி அதிமுக வேட்பாளரின் கணவர் தற்கொலை: போலீசுக்கு தெரியாமல் சடலம் எரிப்பு

சத்தியமங்கலம்: 
உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த அதிமுக வேட்பாளரின்
கணவர் தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே
அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி
பெற்றுள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 9 வார்டிலும், அதிமுக 2
வார்டிலும், சுயேச்சைகள் 4 வார்டிலும் வெற்றி பெற்றனர். 12வது வார்டில்
அதிமுக சார்பில் போட்டியிட்ட பெரியூர் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரது
மனைவி சகுந்தலா, திமுக வேட்பாளர் மகேஸ்வரியிடம் தோல்வி அடைந்தார். திமுக
வேட்பாளர் மகேஸ்வரி 468 வாக்குகள் பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர்
சகுந்தலா 113 வாக்குகள் மட்டுமே பெற்றார்.இதனால் மனமுடைந்த
சகுந்தலாவின் கணவரும், அதிமுக பிரமுகருமான துரைசாமி பூச்சி மருந்து
குடித்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவரது உடலை
கொண்டு வந்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தெரியாமல் எரித்ததால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.  …

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு