தேன் கேக்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். மைதா மாவைச் சலித்துக் கொள்ளவும். முட்டையுடன் கேஸ்டர் சுகரைச் சேர்த்து அடிக்கவும். அதன் பின் இந்தக் கலவையில் தேனைச் சேர்த்து நன்கு அடிக்கவும். கலவை ரிப்பன் பதத்திற்கு வரும் வரை சுமார் 10 நிமிடங்கள் அடிக்கவும். மேலும் இதனுடன் எசன்ஸ் ஊற்றிக் கலந்து அதில் மைதா மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவிக் கலக்கவும். மாவை கலக்க மட்டும் பீட்டரைப் பயன்படுத்தாமல் ஸ்பாடுலாவைக் கொண்டு மென்மையாகக் கலக்கவும். ஓவனை பிரீ ஹீட் செய்யவும். கலவையை ஒன்றாகச் சேரும்படி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பேக்கிங் ட்ரேயில் வெண்ணையை தடவி அதில் கலவையை ஊற்றி, 30 நிமிடம் அவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும். பின் தேவைக்கேற்ப கட் செய்து பரிமாறவும். தித்திக்கும் ‘தேன் கேக்’ தயார்….

Related posts

தர்பூசணி தோல் துவையல்

உளுத்தம் பருப்பு துவையல்

பீட்ரூட் குழம்பு