தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை நாசம் செய்து 3 யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே, 3 யானைகள் நள்ளிரவில் விளை நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே மணியம்பாடி கிராமத்தில் விவசாயிகள் தக்காளி, ராகி, சோளம் பயிரிட்டுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் மணியம்பாடி கிராமத்துக்குள் நுழைந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தி கொண்டிருந்தன. இதுகுறித்து அறிந்த விவசாயிகள் அங்கு சென்று வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டும், சத்தம் எழுப்பியும் யானைகளை விரட்ட முயன்றனர். ஆனாலும் யானைகள் நள்ளிரவு நேரத்தில் நீண்ட நேரம் விளைபயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், விவசாயிகளுடன் இணைந்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்