தேன்கனிக்கோட்டை அருகே சாலையை கடந்த யானைகள்-வனத்துறையினர் விரட்டியடித்தனர்

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே வனத்துறையினர் விரட்டியடித்ததால், யானைகள் மரகட்டா கிராமத்தில் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன.தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலஹள்ளி காப்புக்காட்டில் 6 யானைகள் முகாமிட்டிருந்தன. அவை வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வந்ததால் ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று ஆலஹள்ளி காப்புக்காட்டில் இருந்து 6 யானைகளையும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது 4 யானைகள் மற்றும் 2 யானைகள் தனித்தனியாக பிரிந்து, தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள மரக்கட்டா கிராமத்தில் சாலையை கடந்தன. அதனால் அவ்வழியாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது யானைகள் கோன்பள்ளம் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்….

Related posts

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து

இன்று ஓய்வு பெற இருந்த அரசு பள்ளி ஹெச்.எம். சஸ்பெண்ட்