தேனீக்கள் தாக்கி 11 தொழிலாளர்கள் காயம்

கூடலூர், ஏப். 5: தமிழக எல்லை குமுளி அருகே உள்ள வண்டிப்பெரியாறு பகுதியிலுள்ள ஜனதா ஏலத்தோட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மேரி (60), சுகதா (55), சீதா(75), மாரியம்மா(65), ராசம்மா (60), விஜயா(60), கொழந்தியம்மாள் (57), உடையார் (57) மற்றும் அதே தோட்டத்தைச் சேர்ந்த பாலா (53), சின்னக்கருப்பு (36) உட்பட 11 தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பறந்துவந்த தேனீக்கள் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை கொட்டியது. இதில் தொழிலாளர்கள் பலர் மயங்கி விழுந்தனர். அவர்களின் அலறல் சத்தம்கேட்டு அப்பகுதியிலிருந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஓடிவந்து தேனீக்கள் தாக்கியவர்களை காப்பாற்றி வண்டிப்பெரியாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டபின் அவர்களில் 4 பேர் மேல்சிகிச்சைக்காக பீருமேடு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சதுரகிரி கோயிலுக்கு நேரம் கடந்து வந்த பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

எம்.புதுப்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனித் தாலுகா உருவாக்க கோரிக்கை