Sunday, September 8, 2024
Home » தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

by Ranjith

தேனி, ஜூலை 26: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்க உள்ளது. தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் இன்று(26ம் தேதி) காலை 10 மணியளவில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

தமிழகம் முழுவதும் மற்றும் புதுச்சேரியில் பணிபுரிய 18 வயது முதல் 45 வயதுடைய 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்பு மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப்படிப்புகள் படித்த ஆண் மற்றும் பெண் வேலைநாடுநர்களை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மாத ஊதியத்தில் தேர்வு செய்ய உள்ளனர்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். எனவே, வேலைநாடுநர்கள் தங்களது சுயவிபர நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi