தேனி மாவட்டம் முழுவதும் ஒரேநாளில் 60,020 பேருக்கு தடுப்பூசி-ஆர்வத்துடன் செலுத்திக் கொண்ட பொதுமக்கள்

தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாமில் ஒரே நாளில் 60 ஆயிரத்து 20 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது.தேனி மாவட்டத்தில் நேற்று ஆண்டிப்பட்டி தாலுகாவில் 93 மையங்களிலும், தேனி தாலுகாவில் 57 மையங்களிலும், பெரியகுளம் தாலுகாவில் 73 மையங்களிலும், போடி தாலுகாவில் 60 மையங்களிலும், உத்தமபாளையம் தாலுகாவில் 127 மையங்கள் என மொத்தம் 410 மையங்களில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆண்டிபட்டி வட்டாரத்தில் 8 ஆயிரதது 619 பேரும், க.மயிலாடும்பாறை வட்டாரத்தில் 5 ஆயிரத்து 800 பேரும், பெரியகுளம் வட்டாரத்தில் 6 ஆயிரத்து 78 பேரும், தேனி வட்டாரத்தில் 4 ஆயிரத்து 91 பேரும், போடி வட்டாரத்தில் 4 ஆயிரத்து 375 பேரும், சின்னமனூர் வட்டாரத்தில் 2 ஆயிரத்து 645 பேரும், உத்தமபாளையம் வட்டாரத்தில் 2 ஆயிரத்து 692 பேரும், கம்பம் வட்டாரத்தில் 1 ஆயிரத்து 331 பேருமாக எட்டு வட்டாரங்களில் மொத்தம் 35 ஆயிரத்து 631 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். ஊராட்சிகள் தவிர 22 பேரூராட்சிகள், 6 நகராட்சிகளில் 24 ஆயிரத்து 389 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதனையடுத்து நேற்று ஒரே நாளில் கோவாக்ஷின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை 60 ஆயிரத்து 20 பேர்  செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.  இதன்மூலம் தேனி மாவட்டத்தில் 6 லட்சத்து 27 ஆயிரத்து 463 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 770 மாற்றுத்திறனாளிகள் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டதன் மூலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 309 மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ராயப்பன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பெளமிகா தலைமையில் மருத்துவ குழுவினர் கொரானா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தினர். இதில் காலை முதலே மிக ஆர்வத்துடன் பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். முன்னதாக ஊராட்சி நிர்வாகத்தால், தடுப்பூசி போடுபவர்களுக்கு, குலுக்கல் முறையில் 3 பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அய்யப்பன், திருப்பதிவாசகன் (கி.ஊ) ஆகியோர் பார்வையிட்டனர்.உத்தமபாளையம் வட்டார அளவில் 38 இடங்களில் கொரானா தடுப்பூசி செலுத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தம் 50 ஆயிரம் மக்களுக்கு இலக்கு என்ற கணக்கில் முகாம்கள் தொடங்கப்பட்டன. இதற்காக அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. பொதுமக்கள் நேரடியாக காலை 7 முதல் முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிக ஆர்வத்துடன் காலை முதலே திரண்டனர். இந்த நிலையில் காலை 9 மணிக்கு தாமதமாக தொடங்கிய கொரானா தடுப்பூசி முகாம் மதியம் ஒரு மணிக்கு முடிவடைந்தது. காரணம் தடுப்பூசி அதிகளவில் சப்ளை இல்லாததால் பொதுமக்கள் காத்திருந்து பின்பு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வட்டார அளவில் மொத்தமே 5220 பேர்க்கு மட்டுமே கொரானா தடுப்பூசி போடப்பட்டது. வட்டார தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அனைத்து முகாம்களும் நேரடியாகச் சென்று கண்காணிக்கப்பட்டு தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.பெரியகுளம்பெரியகுளம் நகராட்சியில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, அலெக்சாண்டர், சபை போதகர் ஸ்டாலின் பிரபாகர், திமுக நகர பொறுப்பாளர் முரளி, நகர துணைச் செயலாளர் அப்பாஸ்கான், பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆண்டிபட்டிஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் 47 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில். ஆண்டிபட்டி அருகே தேனி சாலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் அமைந்துள்ள சிலோன் காலனி என்ற இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இப்பகுதியில் தடுப்பூசிகள் முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பதாலும், அருகிலேயே தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனோ தடுப்பூசிகள் 24 மணி நேரமும் போடப்பட்டு வருவதாலும் 100 தடுப்பூசிகள் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், முதியவர்கள் குவிந்தனர். இதையடுத்து அருகிலுள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து சுகாதாரத் துறையினர் கூடுதல் தடுப்பூசிகளை கொண்டு வந்தனர்.கூடுதல் தடுப்பூசி வழங்க கோரிக்கைகடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், முருக்கோடை உள்ளிட்ட பகுதிகளில் முகாம் நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் மதியம் 12 மணிக்குள் ஊசி மருந்து பற்றாக்குறை காரணமாக முடிவடைந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்த 9வது வார்டு உறுப்பினர் பாண்டியம்மாள் பரமானந்தன் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால் பொதுமக்கள் ஊசி போட முடியாமல் வீட்டிற்கு மிகவும் வருத்தத்துடன் சென்றனர். இதனால் கூடுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்….

Related posts

மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் மறுப்பு