தேனி மாவட்டம் மின்பகிர்மான வட்டத்தில் உயரழுத்த-தாழ்வழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணி

தேனி, ஜூலை 29: தேனி மாவட்டத்தில் மழைக்காலம் துவங்குவதையொட்டி மின்பகிர்மான வட்டத்தில் உள்ள உயரழுத்தம் மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் ஒட்டு மொத்த சிறப்பு பராமரிப்பு பணிகள் நேற்று நடந்தது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால், தேனி மாவட்டத்தில் மின்தடை மற்றும் மின்விபத்துக்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வருகிற வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து விதமான முன்னச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்தொடர்பாக தேவையான தளவாட சாமான்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேனி மின்பகிர்மான வட்டத்தில் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் ஒட்டு மொத்த சிறப்பு பராமரிப்பு பணிகள் சிறப்பு பராமரிப்பு பணிகள் கடந்த 19ம் தேதியும், 26ம் தேதியும் நடந்தது. இதில் கடந்த 26ம் தேதி தேனி மாவட்டத்தில் 83 பழுதடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியும், 85 த£ழ்வான மின்கடத்திகளை சீர்செய்தல், 30 மின்கம்பங்கள் இடைசெறுகல், 112 பழுதான இன்சுலேட்டர்கள்களை மாற்றுதல், 89 சேதமடைந்த ஜம்பர்களை மாற்றுதல், 532 மரக்கிளைகளை வெட்டுதல், 39 சாய்ந்த மின்கம்பங்களை சீர்செய்தல், 32 மின்மாற்றி கட்டமைப்பு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகவலை தேனி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தெரிவித்தார்.

Related posts

மதுரையில் ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வரும் 8ம் தேதி முதல் இந்திய விமானப்படை தேர்விற்கு விண்ணபிக்கலாம்

ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டும் பணி தீவிரம்