தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம்

தேனி, பிப். 14: தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கேரள மாநிலம் சூரியநல்லி அப்பர் எஸ்டேட்டில் நடந்தது. தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கேரள மாநிலம், மூணாறில் உள்ள சூரியநல்லி அப்பர் எஸ்டேட் நிர்வாகம் இணைந்து இலவச மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ பரிசோதனை முகாமை அங்குள்ள அரசுப் பள்ளியில் நடத்தின. முகாமில் ஹாரிசன்ஸ் மலையாளம் அப்பர் எஸ்டேட் மேலாளர் அன்சுமன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

எஸ்டேட் தொழிலாளர் நல அலுவலர் ஜாய்ஸ் ஜார்ஜ், எஸ்டேட் மருத்துவர் தீபக் மற்றும் சிறப்பு பொது மருத்துவ சிகிச்சை டாக்டர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்து குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர். முகாமில் பச்சிளம் குழந்தைகள் நல சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர் குமார் ஆனந்த், பொது சிகிச்சை சிறப்பு டாக்டர் ஜெகதீஸ், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர்கள் முத்து குகன், ஷேக் ஹாலித்,

தோல்நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் மாதவ் பிரவீன், ஹவ்துல் ஆலம், நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் நிரஞ்சன் பிரபாகர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பிரபாகரன், மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் பிர்தவ்ஸ் பாத்திமா, ஸ்கேன் பரிசோதனை நிபுணர் சாபி ஆனந்த் ஆகியோர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனைகள் செய்து இலவச மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள். முகாமில் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 700 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு