தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

தேனி, செப். 26: தேனி நகராட்சிக்குட்பட்ட கருவேல்நாயக்கன்பட்டியில் அரசு கள்ளர் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியான கருவேல்நாயக்கன்பட்டியில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான கடவுள் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை பாண்டிலட்சுமி வரவேற்றார். இதில் தேனி அல்லிநகரம் நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு விழிப்புணர்வு குறித்து பேசினார். இம்முகாமில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுல்தான், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை