தேனி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

 

தேனி, ஜூலை 12: தேனி அருகே காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தேனி எம்.பியுமான தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தேனியில் உள்ள தேனி வடக்கு மாவட்ட திமுக மற்றும் தேனி நகர திமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தேனி அருகே காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் தலைமையில் சுமார் 100 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து தங்கதமிழ்செல்வன் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் தேனி ஊராட்சி ஒன்றிய சேர்மனுமான சக்கரவர்த்தி, காட்டுநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர் நந்தகோபால், தேனி நகர திமுக செயலாளர் நாராயண பாண்டியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் முல்லை சேகர், தேனி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் ராஜசேகர் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், பூதிப்புரம் பேரூராட்சி சேர்மன் கவியரசு உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து