தேனி என்.எஸ் இன்ஜி., கல்லூரியில் 81 மாணவ, மாணவியருக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா

தேனி, ஜூலை 29: தேனி அருகே வடபுதுப்பட்டியில் தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் 81 பேருக்கு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்தி பேசினார்.

விழாவில், கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் பேசுகையில், கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை பேராசிரியர்கள் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு பெறுவதற்கு திறனறியும் தேர்வு, குரூப் டிஸ்கசன், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வை தயக்கமின்றி அணுகுவதற்கும், ஆங்கிலத்தில் பேசுவதற்கும் பயிற்சிகள் அளிகப்பட்டு வருகிறது. இதன்படி, ஆண்டுதோறும் 80 சதவீதம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என பேசினார்.

இதனையடுத்து பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களான ஜோஹோ, டேட்டா பேட்டன்ஸ், டிசிஎஸ், நியாமோ, வெப்ரக்ஸ், ஜோபின்ஜிஸ்மி, பிளிப்ஸ், எஸ்எம்ஐ, பின்னக்கல், டீம் கம்ப்யூட்டர்ஸ், டைமன்ட்க்ளாஸ், சுயர்சாப்ட் சொல்யூசன்ஸ், ஸ்பைகா டெக், மெலன்வென்சர்ஸ், அப்போலா, டிஎன்டி, ஐஜேஎல், இமெர்ஜ் டெக், க்யூப் அண்ட் ஸ்கொயர், மேஜிக் ரீச், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எம்ப்ளையன் எலக்ட்ரா இவி, கோ ஸ்கில், டேஸோமெட்ரிக், நார்டில் , எம்.எஸ் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ், கம்யூட்ரா போன்ற நிறுவனங்களில் பணிபுரிய 81 மாணவ, மாணவியருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் செய்தார்.

Related posts

கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

கருத்தப்பாலம் பகுதியில் சீரமைப்பு பணி

தூத்துக்குடியில் ஜூலை6ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு