தேனி உட்கட்சி தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது அதிமுகவினர் கடும் ரகளை சேர்களை வீசியதால் பரபரப்பு

தேனி: தேனியில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது ஏற்பட்ட மோதலில், அக்கட்சியினர் சேர்களை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் அதிமுக உட்கட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இதன்படி, தேனியில் உள்ள திருமண மண்டபத்தில் தேனி நகரம், தேனி ஒன்றியம், பழனிசெட்டிபட்டி மற்றும் வீரபாண்டி பேரூராட்சி பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் நேற்று நடந்தது. அதிமுக அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, சீனிவாசன், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் கணேஷ்ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த கூட்டத்தில் தேனி அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சி செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தமிழனுக்கும், வேங்கை என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் அங்கிருந்த சேர்களை தூக்கி வீசி எறிந்தனர். மேலும், தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால், சிறிது நேரம் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே