தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் 4 இடங்களில் சுகாதார முகாம்கள் சேர்மன் துவக்கி வைத்தார்

 

தேனி, நவ. 17: தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தி முயற்சியில் மாவட்ட சுகாதாரத்துறை மூலமாக தந்தை பெரியார் தெரு, முருகன் கோயில் தெரு, கருப்பசாமி கோயில் தெரு, வெற்றிகாளியம்மன் கோயில் தெரு ஆகிய 4 தெருக்களில் நோய்த் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களை பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தி தொடங்கி வைத்தார்.

முகாமிற்கு பேரூராட்சி துணை சேர்மன் மணிமாறன் முன்னிலை வகித்தனர். இதில் சுகாதாரத் துறை மூலம் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு காய்ச்சல் மற்றும் இருமல், சளித் தொந்தரவு உள்ளிட்ட நோய்கள் இருக்கிறதா என முகாமில் கலந்து கொண்டவர்களை பரிசோதனை செய்தனர். இதில் காய்ச்சல் உள்ளிட்ட நோய் இருப்பவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை