தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம்

 

தேனி, செப். 10: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடம் இருந்து 221 மனுக்கள் பெறப்பட்டது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். டிஆர்ஓ ஜெயபாரதி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, முதியேர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கொண்ட 221 மனுக்களை அளித்தனர். இம்மனுக்கள் மீது உரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி