தேனியில் நாளை நடக்கிறது கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம்

தேனி, பிப். 14: தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்விக்கடன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பு கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தேனி அரசு தொழிற்பயிற்சி கல்லூரி வளாகத்தில் நாளை (பிப். 15) வியாழக்கிழமை சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி தொழிற்பயிற்சி கல்லூரி, சட்டக் கல்லூரி போன்ற அனைத்து வகையான கல்லூரிகளில் படிக்கின்ற முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

மேலும் இம்முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் கல்விக்கடன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கும், ஏற்கனவே vidyalakshmi இணையதளத்தில் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் மனுக்களை பரிசீலனை செய்து கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

எனவே மாணவர்கள் தவறாமல் இக்கல்விக்கடன் முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வரும் மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், முகவரி சான்று, ஆதார் கார்டு, பெற்றோரின் பான் கார்டு, வங்கிக்கணக்கு எண், நன்னடத்தை சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களை எடுத்துவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை