தேனியில் சர்வதேச அளவிலான தடயவியல் கருத்தரங்கம்

தேனி, ஜன. 10: தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான தடயவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி வேதியியல் துறை தலைவர் தேவிமீனாட்சி வரவேற்றார். கருத்தரங்கை கல்லூரி செயலாளர் காசிபிரபு துவக்கி வைத்தார். இக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட 48 கட்டுரைகள் உள்ளடக்கிய புத்தகத்தை கல்லூரி செயலாளர் காசிபிரபு வெளியிட, மலேசியாவில் உள்ள மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் நடராஜ மூர்த்தி பெற்றுக் கொண்டார்.

இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வேதியியல் துறை இணைப்பேராசிரியர் நாகராஜ், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஹேமமாலினி, ஆப்ரிக்காவில் உள்ள புனித ஜான்பாப்ன்டிஸ்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியியல் துறை விரிவுரையாளர் காமேஸ்பாண்டியன், திண்டுக்கல் தாமரைப்பாடி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் மரியபிரவீனா ஆகியோர் பேசினர். இதில் சிறப்பான முறையில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து விளக்கிய மாணவியர்களுக்கு கல்லூரி முதல்வர் சித்ரா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு