தேனியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 

தேனி, ஆக. 21: தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். சண்முகவேல், விக்னேஷ், பாபு, ஜமுனா ராணி முன்னிலை வகித்தனர்.

இதில், செல்வமங்கை கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும், ஈட்டிய விடுப்பு ஒப்படைத்து அதற்கான ஊதியத்தை பெறும் உரிமை மீண்டும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி