Monday, July 8, 2024
Home » தேனிக்கு தனி பாராளுமன்றம் இருக்கா? இந்தியாவுக்கு ஒண்ணு தானே இருக்கு…?: அதிமுக எம்பி பெயர்ப்பலகை வலைத்தளங்களில் வைரல்

தேனிக்கு தனி பாராளுமன்றம் இருக்கா? இந்தியாவுக்கு ஒண்ணு தானே இருக்கு…?: அதிமுக எம்பி பெயர்ப்பலகை வலைத்தளங்களில் வைரல்

by kannappan

பெரியகுளம்: ‘‘தேனிக்கு தனி பாராளுமன்றமா… இந்தியாவுக்கு ஒரே பாராளுமன்றம்தானே…’’ என பெரியகுளத்தில் உள்ள தேனி எம்பி அலுவலக பெயர்ப்பலகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ரவீந்திரநாத் உள்ளார். இவரது அலுவலகம் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள கம்பம் சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தை அவரது தந்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தில் முகப்பில் உள்ள பெயர்ப்பலகையில், ‘‘தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம்’’ என்பதற்கு பதிலாக, ‘‘தேனி பாராளுமன்ற அலுவலகம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில், ‘‘தேனிக்கு என்று தனி பாராளுமன்றமா? இந்தியா முழுமைக்கும் ஒரே பாராளுமன்றம்தானே! தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் என்றுதானே இருக்க வேண்டும்’’ என கிண்டலாக மீம்ஸ் போட்டு வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

16 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi