தேச துரோக செயல்பாடு: ஐபிஎஸ் அதிகாரி கைது

புதுடெல்லி: லஷ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு தகவல்களை கசிய விட்ட என்.ஐ.ஏ.வை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அமைப்பில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் அரவிந்த் திக்விஜய் நேகி.  ஹுரியத் பயங்கரவாத இயக்கத்திற்கு நிதி வழங்கிய வழக்கில் புலனாய்வு செய்ததற்காக 2017ம் ஆண்டு வீரதீர விருது பெற்றவர். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துக்கு மிக முக்கிய தகவல்களை கசிய விட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க கூடிய அமைப்பில் பணியாற்றிக் கொண்டு நாட்டுக்கு எதிரான வேலைகளில் ஐ.பி.எஸ். அதிகாரி ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு