தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு தஞ்சாவூரில் இப்தார் நோன்பு திறப்பு

தஞ்சாவூர், ஏப்.3: தஞ்சாவூரில் தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர் முஜ்பூர் ரஹ்மான் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் மதநல்லினக்க பிரிவு, மாநில செயலாளர் தென்னை விஞ்ஞானி செல்வம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கூட்டமைப்பின் தேசியபொது செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் ரம்லான் நோன்பின் சிறப்பு குறித்து கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராஜா சுப்பிரமணியன், கரந்தை கண்ணன், முகமது யூனுஸ் பேசினர். நிகழ்ச்சியில் செல்வம் நகர் மஸ்ஜித் இஹ்சான் பள்ளிவாசல் இமாம் மெளலவி முகமது இப்ராஹிம் நோன்பின் மகத்துவத்தை விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் மருத்துவர்கள், பொதுமக்கள், தஞ்சாவூர் எக்னாமிக் சேம்பர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்தார் நிகழ்ச்சியில் மதநல்லிணகத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. நிகழ்ச்சியில் தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் மாவட்ட, மாநகர நிர்வாகிகள்,மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டமைப்பின் மாநகர தலைவர் ராஜா, மற்றும் முகமது அலி நன்றி கூறினார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி