தேசிய கிக் பாக்சிங் போட்டியில் சிவகங்கை சிறுவர் சிறுமியர் சாதனை

சிவகங்கை, மே 29: தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சிவகங்கை சிறுவர், சிறுமியர் சாதனை படைத்தனர்.  தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மே 21 முதல் மே 26வரை நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் 28 மாநிலங்களில் இருந்து 1291 வீரர் மற்றும் வீராங்கணைகள் பங்கேற்றனர். இதில் சிறுவர்கள் மற்றும் கேடட் பிரிவினருக்கு போட்டிகள் நடைபெற்றன.

இதில் தமிழக அணி சார்பாக 102 வீரர் மற்றும் வீராங்கணைகள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வரலாற்றில் முதல் முறையாக பலம் வாய்ந்த மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு ஒட்டு மொத்த சாம்பியன்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றது. கேடட் பிரிவுகளிலும் இரண்டாவது இடத்தை தட்டி சென்றது.

இப்போட்டிகளில் சிவகங்கையை சேர்ந்த 6 சிறுவர் சிறுமியர் தமிழ்நாடு அணிக்காக களம் இறங்கிய நிலையில் மனுஸ்ரீ தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தையும், ருட்வின்பிரபு வெள்ளி பதக்கத்தையும், ரூபன்சாய்சிவன் வெண்கல பதக்கத்தையும் பெற்றனர். தலைமை பயிற்சியாளர் சுரேஷ்பாபு, பயிற்சியாளர் குணசீலன், கிக்பாக்ஸிங் அசோசியேசன் சங்க தலைவர் சதிஷ், சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரமேஷ்கண்ணன் வெற்றி பெற்றகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்