தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு கருமாபாளையத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு

திருப்பூர், செப்.3: தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில், தத்தெடுத்த கிராமமான கருமாபளையத்தில் உங்களுக்குள் முதலீடு செய்யுங்கள், ஊட்டச்சத்தை வாங்குங்கள் என்ற மைய கருத்தை வழியுறுத்தி, வீடு, வீடாக சென்று ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஆலோசகர் காமராஜ் முன்னிலை வகித்தார். கிராம பஞ்சாயத்து தலைவர் பூங்கொடி சக்திவேல், துணைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் விழிப்புணர்வை துவக்கி வைத்தனர். பிறகு, மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, செர்லின், தினேஷ் கண்ணன், சபரிவாசன் ஆகியோர் தலைமையில், மாணவர்கள் வீடு, வீடாக சென்று, தேசிய ஊட்டச்சத்து வாரம் ஆண்டுதோறும் செப்.,1 முதல் 7ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

நோய் தவிர்க்க ஊட்டச்சத்து அவசியம், துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். துரித உணவுகளை அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் ஏற்படும். சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் சிறப்பான வாழ்வை நாம் வாழலாம். பாரம்பரியமான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளின் வாழ்க்கையில் ஊட்டச்சத்தின் தேவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஆகையால் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கூறியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை