தேசிய அளவிலான வினாடி வினா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

 

கோவை, செப். 15: ஜி 20 மாநாட்டை முன்னிட்டி ஆர்.பி.ஐ சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கோவை காந்தி மாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களான ராம்பிரியா மற்றும் ஆகாஷ் கலந்துகொண்டனர். இதில் வட்டம், மாவட்டம், மாநிலம், தென்மாநில அளவிளான போட்டியில் முதல் பரிசை வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தேசிய அளவிலா போட்டி மும்பையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, மத்யபிரதேஷ், பிஹார், அசாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மொத்தம் 12 பேர் கலந்துகொண்டனர். வீடியோ மற்றும் ஆடியோ, பசர், நெகடிவ் பசர், ஸ்பீட் ஆகிய சுற்றுகளில் தமிழகம் சார்பாக கலந்துகொண்ட மாணவர்களான ராம்பிரியா மற்றும் ஆகாஷ் சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?