தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

கும்மிடிப்பூண்டி, அக்.4: தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு பள்ளிக்குழுமம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, ஆந்திரா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், பீகார், ஒடிசா, அரியானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவரப்பேட்டை ஆர்.எம்.கே. ரெசிடென்சியல் பள்ளி மாணவன் ஜி.திலீப், துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார். அதில் அவர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு, குரூப்பிங் சுடுதல் போட்டியில் அபரிமிதமான வெற்றியை பெற்று தங்கம், வெள்ளி பதக்கங்களையும், கோப்பையையும் வாங்கினார்.

அவருக்கு டிஜி என்.சி.சி. லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் பதக்கம், கோப்பைகளை வழங்கினர். தொடர்ந்து மாணவன் திலீப்புக்கு, கல்வி குழுமத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், தாளாளர் யலமஞ்சி பிரதீப், தலைமை ஆசிரியர் சப்னா சன்கலா மற்றும் என்சிசி அதிகாரி முகமது கனி ஆகியோர் மாணவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்