தெலுங்கானாவில் ஆளுநர் – முதல்வர் மோதல் போக்கு எதிரொலி: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச திட்டம்

தெலுங்கானா: தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகராவ், ஆளுநர் தமிழிசைக்கு இடையே மோதல் போக்கு நீ0டித்து வரும் நிலையில், டெல்லி சென்ற ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். சமீபத்தில் தெலுங்கானா சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை ரத்து செய்தது முதல் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் ஆளுநர் தமிழிசையை முதலமைச்சர் சந்திரசேகராவ் புறக்கணித்து வருகிறார். சமீபத்தில் தமிழிசை பத்ராசலம் சென்றிருந்த போது, அவரை வரவேற்க மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் செல்லவில்லை. அரசு நிகழ்ச்சிகளில் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது பற்றி, பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் தமிழிசை முறையிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆளுநர் தமிழசை சவுந்தரராஜன் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சில மூத்த அமைச்சர்களை அவர் சந்தித்து பேசி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தெலுங்கானாவில் இருந்து தமிழிசையை விடுவித்து பாஜக ஆளும் மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்க ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை, தெலுங்கானாவுக்கு மாற்றி விட்டு கேரள ஆளுநராக தமிழிசை நியமிக்க படலாம் என்றும் டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.   …

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு