தெலங்கானாவில் வெடிவிபத்து: போலீசார் விசாரணை

ஐதராபாத்: தெலங்கானாவின் நிஜாமாபாத் நகரில் நடந்த வெடிவிபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் படா பஜாரில் நேற்றிரவு மர்ம பொருள் வெடித்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, வெடி விபத்தால் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் கூறுகையில்: மர்ம பெட்டியில் இருந்த ரசாயன கலவை வெடித்தது. இந்த வெடி விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் இருந்து முக்கிய தடயங்களை சேகரித்து வருகின்றனர். வெடிவிபத்தில் காயமடைந்தவர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்’ என்றனர். …

Related posts

டெல்லியில் கொட்டி தீர்க்கும் கனமழையால் தாய், மகன் உள்பட 7 பேர் பலி: கட்டிடம் இடிந்ததால் பரபரப்பு

புதுச்சேரி சட்டசபையில் வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு இரங்கல்

தென்னிந்தியாவில் கொட்டிய மழை வடமேற்கு, கிழக்கில் இல்லை; 230 மாவட்டத்தில் கன மழை 232ல் சராசரிக்கும் குறைவு: இந்திய வானிலை மையம் தகவல்