தெலங்கானாவில் சொகுசு பஸ்சில் தீவிபத்து: 26 பயணிகள் உயிர் தப்பினர்

திருமலை: சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து தெலங்கானாவுக்கு வந்த சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்து கருகியது. டிரைவரின் சாமர்த்தியத்தால் 26 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.  சட்டீஸ்கர் மாநிலம், ஜக்தால்பூரில் இருந்து தெலங்கானாவுக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தனியார் சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 26 பயணிகள் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் தெலங்கானா மாநிலம், ஜனகாமா மாவட்டம் நெல்லுட்லா ஆர்டிசி காலனி அருகே வந்தபோது திடீரென பஸ் இன்ஜினில் இருந்து புகை வந்தது. இதைக்கண்ட டிரைவர், உடனே பஸ்சை நிறுத்தி விட்டு பயணிகளை உஷார்படுத்தினார். இதையடுத்து, பயணிகள் அவசர அவசரமாக பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். . சில நிமிடங்களில் பஸ் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இதில், பயணிகளின் உடமைகளும் கருகியது. இதுகுறித்து தகவலறிந்த ஜனகாமா தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் பஸ் முற்றிலும் எரிந்து கருகியது.  பேட்டரியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது