தெலங்கானாவில் கொரோனா தனிமை வார்டில் ஆடல், பாடலுடன் நோயாளிகளை உற்சாகப்படுத்தும் செவிலியர்கள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

திருமலை: தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்ட கொரோனா தனிமை வார்டில் நோயாளிகளை ஆடல் பாடல்களுடன் செவிலியர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. தெலங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில்  உள்ள கொரோனா தனிமை வார்டில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் சிகிச்சை அளித்து  வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் கொரோனா நோயாளிகளுக்கு மனதைரியத்தை ஏற்படுத்தும் விதமாக  அவர்களுடன் பாட்டு பாடி நடனம் ஆடியபடி அவர்களை   மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் செவிலியர்கள் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.  இந்த வீடியோவை பார்க்கும்  அனைவரும் செவிலியர்களை பாராட்டி வருகின்றனர்.  இவ்வாறு செய்வதன்   மூலம் கொரோனாவை எதிர்த்து அனைவரும்  வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர்….

Related posts

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சட்டீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை: சிறப்பு படை போலீஸ் அதிரடி