தெற்கு ரயில்வேயின் 50வது ஆக்சிஜன் ரயில் தமிழகம் வந்தடைந்தது: ஒரே நாளில் 444 மெட்ரிக் டன் டெலிவரி

சென்னை: தெற்கு ரயில்வேயின் 50வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று தமிழகம் வந்தது. இதன்மூலம் அதிகபட்சமாக 444 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒரே நாளில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால், அவர்களுக்கு ஆக்சிஜன்  தேவைப்படுகிறது.  இதற்கு போதிய அளவு ஆக்சிஜன் தமிழகத்தில் இல்லாததால், வெளி  மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ரயில் மூலம் ஆக்சிஜன்  இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த மே 14ம் தேதி நிலவரப்படி தெற்கு ரயில்வே சார்பில் 3404.85 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி 46வது எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் இருந்து தண்டையார்பேட்டையில் உள்ள ரயில்வே பணிமனைக்கு 37.95 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் நேற்று முன்தினம் இரவு 9.40மணிக்கு வந்தது. 47வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்கத்தில் இருந்து 146.81 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் நேற்று காலை 8.40மணிக்கு வந்தது. 48வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் இருந்து தண்டையார்பேட்டைக்கு 128.11 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன், நேற்று காலை 9.40மணிக்கு வந்து சேர்ந்தது. 49வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சத்தீஸ்கரில் இருந்து தண்டையார்பேட்டைக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன், நேற்று மதியம் 2.25 மணிக்கு வந்து சேர்ந்தது. 50வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் இருந்து மதுரைக்கு 89.16 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் நேற்று மாலை 5.17மணிக்கு வந்தது.  இந்நிலையில், நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 444 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்