தெற்கு டெல்லி மாநகராட்சியில் 191 கழிவறைகளில் ஹைடெக் வசதி

புதுடெல்லி; தெற்கு டெல்லி மாநகராட்சியில் உள்ள 191 கழிவறைகளில் ஹைெடக் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. சுகாதார திட்டத்தின்கீழ் தெற்கு டெல்லி மாநகராட்சி கழிவறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக பல்வேறு உயர்தர வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 191 கழிவறைகள் தேர்வு செய்யப்பட்டு அதில் உயர்தரவசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கழிவறைகளில் ஒருங்கிணைந்த அடையாள எண், ஊனமுற்றோருக்கு தேவையான வசதிகள், பாலினத்தை தெளிவாக குறிப்பிடுதல், முறையான விளம்பரம், பெண்கள் கழிவறையில் சானிட்டரி நாப்கின், போதுமான காற்று வசதி, க்யூஆர் கோடு தகவல் அளிக்கும் வசதி, குழந்தைகளுக்கு குறைந்த உயரத்தில் கழிவறை, கழிவறை வளாகத்தில் தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பெண்களுக்கு மட்டும் பிங்க் கழிவறை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறையில் பெண்கள் மட்டுமே ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கூகுள் மேப் மூலம் எளிதாக கழிவறையை அடையாளம் கண்டுபிடிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தெற்கு டெல்லி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு மண்டலத்தில் இந்த வசதிகளுடன் 61 கழிவறைகளும், மத்திய மண்டலம், மேற்கு மண்டலத்தில் தலா 50 கழிவறைகளும், நஜாப்கார்க் மண்டலத்தில் 30 கழிவறைகளும் இதே போன்ற வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. பாசிம்புரி, மதிபூர், ரகுபீர்நகர், ஹரிநகர், விகாஸ்புரி மாவட்ட பூங்கா, பிந்தாபூர், கீரின்பார்க், பி பிளாக் மார்க்கெட் வசந்த் விஹார், ஆர்கே புரம், மளவியாநகர் உள்பட்ட பகுதிகளில் உள்ள இதே போன்றகழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் சுகாதார திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு உயர்தரத்தை பெறவும், ஓடிஎப்++ அந்தஸ்தை பெறவும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு டெல்லி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது கழிவறைகளுக்கு மின்கட்டண தள்ளுபடிகிழக்கு டெல்லி மாநகராட்சி நிலைக்குழு கூட்டத்தில் 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் அனைத்து பொதுக்கழிவறைகளுக்கும் மின்கட்டணத்தை தள்ளுபடி செய்யும் திட்டம் பரிந்துரை செய்யப்பட்டது. கழிவறைகளை வருமானம் பார்க்கும் இடமாக கருதக்கூடாது என்பதன் அடிப்படையிலும், டெல்லி அரசு 200 யூனிட் வரையிலான மின்கட்டணத்தை தள்ளுபடி செய்து இருப்பதாலும் மாதம் 200 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தும் கழிவறைகளுக்கு மின்கட்டணம் தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் உபயோகப்படுத்தினாலும் சாதாரண கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு கிழக்கு டெல்லி மாநகராட்சி அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் திருட்டு வழக்கில் சகோதரர் மருமகள் கைது: 70 சவரன் மீட்பு

சாலிகிராமத்தில் டேட்டிங் அப் மூலம் பாலியல் தொழில் நடத்திய அசாம் வாலிபர் கைது