தெருக்களை ஆக்கிரமித்த வீடுகளை அளவீடு செய்த மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்க முடிவு வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி பேஸ்- 3 பகுதியில்

வேலூர், அக்.4: வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி பேஸ்-3 பகுதியில் தெருக்களை ஆக்கிரமித்த வீடுகளை அளவீடு செய்த மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளனர். வேலூர் மாநகராட்சியில் சாலை, கால்வாய், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என்று அதிகளவில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் இருந்து எழுந்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சியில் சத்துவாச்சாரி பேஸ்-3 பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பகுதியில் சாலை அமைப்பதற்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் ஜானகி உத்தரவின்பேரில், செயற்ெபாறியாளர் தாமோதரன், கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர், சத்துவாச்சாரி பேஸ்-3 வள்ளலார் டேங்க் தெரு மற்றும் சுற்றுப்புற தெருக்களில் அளவீடு செய்தனர். இதில் சுமார் 10 வீடுகள் வரையில் முன்புறம் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகள் வீட்டு வசதிவாரியத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. எனவே வீட்டுவசதி வாரியத்திடம் மனைவிவரங்கள் கேட்டுள்ளனர். அந்த விவரங்கள் கிடைத்தவுடன் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்படும். நோட்டீஸ் வழங்கிய 15 நாட்களில் சம்மந்தப்பட்ட உரிமையாளர்களே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

இடியுடன் கொட்டிய கனமழை

பாலித்தீன் குப்பைகளால் விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம்

ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச அஹிம்சை தினத்தை முன்னிட்டு பயிற்சி பட்டறை