தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக தொடரை வென்றது பாகிஸ்தான்

ராவல்பிண்டி: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், 95 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 272 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் ஆஸம் 77, பவாத் ஆலம் 45, பாகீம் அஷ்ரப் 78* ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் நோர்ட்ஜ் 5, மகராஜ் 3, முல்டர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, முதல் இன்னிங்சில் 201 ரன்னுக்கு சுருண்டது. பவுமா 44*, கேப்டன் டி காக் 29, முல்டர் 33, லிண்டே 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். பாக். பந்துவீச்சில் ஹசன் அலி 5, அப்ரிடி, அஷ்ரப், நவுமன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.71 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் 298 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ரிஸ்வான் 115, நவுமன் 45, அசார் 33, பாகீம் 29, யாசிர் 23 ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்கா தரப்பில் லிண்டே 5, மகராஜ் 3, ரபாடா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 370 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 4ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்திருந்தது.நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணி 274 ரன்னுக்கு சுருண்டு 95 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மார்க்ராம் 108, வாண்டெர் டுஸன் 48, பவுமா 61, முல்டர் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பாக். பந்துவீச்சில் ஹசன் அலி 5, அப்ரிடி 4, யாசிர் 1 விக்கெட் வீழ்த்தினர். பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி மொத்தம் 120 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஹசன் அலி ஆட்ட நாயகன் விருதும், முகமது ரிஸ்வான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்….

Related posts

யூரோ கோப்பை கால்பந்து சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி: சேம்சைடு கோலால் வெளியேறியது துருக்கி

13 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டி20 போட்டி: வெற்றியை தொடங்குமா இந்தியா