தென்மாவட்ட மக்களுக்கு சென்னிமலையில் இருந்து 1000 போர்வைகள் அனுப்பி வைப்பு

 

சென்னிமலை, டிச.25: தென் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் சார்பில் 1,000 போர்வைகள் அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் அம்மாவட்ட மக்கள் தங்களது இயல்பு வாழ்கையை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டடனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமியின் ஆலோசனையின்படி சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் சார்பில் போர்வைகள் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னிமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செங்கோட்டையன், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி இளங்கோ ஆகியோர் முன்னிலையில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் 1,000 போர்வைகள் வழங்கப்பட்டன. பின்னர், இந்த போர்வைகள் வாகனம் மூலம் தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக வழங்க அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், குமாரவலசு ஊராட்சி தலைவரும், மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு தலைவருமான வி.பி.இளங்கோ, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) பாலமுருகன், ஊராட்சி தலைவர்கள் வாசுகி ஜெகநாதன் (வடமுகம் வெள்ளோடு), ரேணுகாதேவி (குட்டப்பாளையம்), சதீஷ்குமார் (முகாசி புலவன்பாளையம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்