தென்பெண்ணை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை

போச்சம்பள்ளி, ஆக.6: போச்சம்பள்ளி வட்டம், மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு பணி ஒத்திகை செயல் விளக்கம் செய்து காட்டினர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, எதிர் வரும் பருவமழை காலங்களில் இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், இடி, மின்னல், மழை போன்றவற்றில் இருந்து பொதுமக்கள் தங்கள் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து கொள்வது குறித்தும், நீர் நிலைகளான கிணறு, குளம், ஏரி போன்றவற்றில் தவறி விழுபவர்களை மீட்பது குறித்தும், செயல்விளக்கம் அளித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை