தென்பாதியில் அரசுக்கு சொந்தமான பழமையான புளியமரம் வெட்டி கடத்தல்-மர்ம நபர்களுக்கு வலை

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் தனியார் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சீர்காழி, மயிலாடுதுறை நெடுஞ்சாலையோரம் உள்ள அரசுக்கு சொந்தமான 75 ஆண்டுகள் பழமையான 4 புளிய மரங்கள் இடையூறாக உள்ளது என்று, அதனை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தும் பணியில் சிலர் ஈடுபட்டனர்.மூன்று மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலையில் பலன் தரும் உயிர் மரங்கள் வெட்டப்படுவதை அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் அதனை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி தாசில்தார் சண்முகம், டிஎஸ்பி லாமேக் ஆகியோர் மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து சமுக ஆர்வலர்கள் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்டு தாசில்தார் சண்முகம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவில் உயிரிழந்த ஒருவரின் பெயரில் சீர்காழி மயிலாடுதுறை- நெடுஞ்சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான 75 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை வெட்டி வாகனத்தில் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. ஆர்டிஓ புளியமரத்தை வெட்ட அனுமதி வழங்கியதாக தெரியவந்துள்ளது. பச்சை புளிய மரத்தை வெட்ட அனுமதி இல்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். புளிய மரத்தை வெட்டியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்சிதம்பரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணிகளை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில சமூக விரோதிகள் அரசுக்கு சொந்தமான சாலையோர மரத்தை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வெட்டி கடத்த முயற்சித்த சம்பவம் சீர்காழி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் நீதிமன்ற உத்தரவின்படி மாற்று மரங்கள் நடப்பட்டு உள்ளதா என்றும், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சீர்காழி பகுதி சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது

பைக்கில் ரோந்து சென்றபோது போலீஸ்காரர் மீது தாக்குதல்: ஐடி ஊழியர் கைது; ரவுடி ஓட்டம்