தென்னை, கொடிக்கால் பயிர்களை பாதுகாக்க வேண்டும் மேட்டூரில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வேலாயுதம்பாளையம் காவிரி ஆற்றை வந்தடைந்தது

வேலாயுதம்பாளையம், ஜூலை 30: மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் வேலாயுதம்பாளையம் காவிரிஆற்றை வந்தடைந்தது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையாலம் அணைகள் நிரம்பியதையடுத்து அங்குள்ள அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று பனிரெண்டு மணியளவில் 103 அடியாக உயர்ந்தது. மேலும் அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 12 ஆயிரம் அடி கன நீர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் வந்தடைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் உத்தரவின் அடிப்படையில் புகளூர் தாசில்தார் தனசேகரன் மேற்பார்வையில் வருவாய் துறையினர் வெள்ளம் தொடர்பாக ஆயத்தப் பணியை செய்து வருகின்றனர். சிறப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி