தென்னையில் நானோ உரங்கள் பயன்பாடு குறித்த கருத்தரங்கு

 

கோவை, ஜூன் 15: கோவை மாவட்டம் பொள்ளாச்சி சேத்துமடையில் தென்னையில் நானோ உரங்கள் பயன்பாடு குறித்த தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதில், வேளாண்மை பல்கலைக்கழக தென்னை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், இப்கோ நானோ வென்சன்ஸ் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

கருத்தரங்கில், இப்கோ நானோ வென்சன்ஸ் மேலாண்மை இயக்குனர் லட்சுமணன், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம் தலைவர் சுரேஷ், வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜமாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர். இதில், புது டெல்லி இப்கோ இயக்குனர் ராமச்சந்திரன், கோவை வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் சக்திவேல் ஆகியோர் தென்னையில் நானோ உரங்கள் பயன்பாடு குறித்த தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை