தென்னிலை கார்வழி சாலையை சீரமைக்க வலியுறுத்தி 6வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

க.பரமத்தி,செப்.19: தென்னிலை அருகே சாலையை சீரமைக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் 6வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம் தென்னிலை முதல் கார்வழி வரை சுமார் 8 கிலோமீட்டர் கொண்ட தார்சாலை முக்கிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். இந்த தார்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்காமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், இந்த சாலையை பயன்படுத்துவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து அரசு அதிகாரிகள் பேச்சு வார்தையில் ஈடுபட்டும் பணிகள் தொடங்கவில்லை. எனவே, தென்னிலை கார்வழி சாலையை சீரமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் பொதுமக்கள் சிலர் நேற்றுடன் 6வது நாளாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்