தென்னிந்திய அளவிலான விலை கண்காணிப்பு, சேகரிப்பு அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் சக்கரபாணி

சென்னை: தென்னிந்திய அளவிலான விலை கண்காணிப்பு மற்றும் சேகரிப்பு அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.  இன்று (16.11.2022) சென்னையில் ஒன்றிய அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணைந்து நடத்திய தென்னிந்திய அளவிலான விலை கண்காணிப்பு மற்றும் சேகரிப்பு அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். துவக்க நிகழ்வில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர். ஜெ. இராதாகிருஷ்ணன், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் வே. ராஜாராமன், தேசிய தகவல் மைய இயக்குநர் என். நடராஜன் மற்றும் ஒன்றிய அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை துணை இயக்குநர் சஞ்சய் கவுசிக் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச குடிமைப்பொருள் வழங்கல் துறை (விலை கண்காணிப்பு) அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கீழ்க்கண்டவாறு துவக்க உரை நிகழ்த்தினார்.    மேலும், இத்திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறையில் அத்தியாவசியப் பண்டங்களின் விலை விவரங்களை கைபேசி செயலி மூலம் பதிவு செய்து அனுப்புதல், விலை விவர பகுப்பாய்வு, அத்தியாவசியப் பண்டங்களின் விலை விவரங்கள் சேகரிப்பில் நவீன முன்னெடுப்புகள் ஆகியவை குறித்து இந்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை அலுவலர்களால் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சார்ந்த 38 குடிமைப்பொருள் வழங்கல் துறை (விலை கண்காணிப்பு) அலுவலர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்