தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சபரி மலை சென்று வந்த ஐயப்ப பக்தர்கள் அருவியில் நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவும் குற்றாலம் அருவி உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் அபாய வளைவைத் தாண்டி தண்ணீர் வழிவதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை சென்று விட்டு திரும்பும் வழியில் குற்றாலம் அருவியில் நீராடி செல்லலாம் என ஆவலுடன் வரும் ஐயப்ப பக்தர்கள் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட திடீர் தடையால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் ஐந்தருவி, சிற்றருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை இல்லை.   …

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு