தென்காசியில் பளுதூக்கும் பயிற்சி பெற ஏப்.28ல் தேர்வு போட்டி

 

தென்காசி, ஏப்.27: தென்காசி கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா திட்ட நிதி உதவியுடன் தொடக்க நிலை பளு தூக்குதல் பயிற்சிக்கான மாவட்ட மையம் தென்காசி மாவட்டத்தில் பயிற்சி கொடுக்கவிருப்பதை முன்னிட்டு இந்த மையத்தில் 30 முதல் 100 பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தினமும் காலை, மாலையில் சிறந்த பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இதில் சேர்வதற்கான மாவட்ட தேர்வு போட்டிகள் வருகின்ற 28.4.2023ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் காலை 10 மணிக்கு ராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி என்ற முகவரிக்கு நேரில் வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்பட மாட்டாது. இது குறித்து மேலும் தகவல்களுக்கு 04633-212580 அல்லது 7708330531 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை