தென்கச்சி பெருமாள் நத்தம் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 

தா.பழூர், ஜூன் 10: தா.பழூர் அருகே தென்கச்சி பெருமாள் நத்தம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம், தா பழூர் அருகே உள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம், மேலகுடிக்காடு, கீழக்குடிகாடு கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து முதலாம் யாகசாலை பூஜை, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. இதில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக பூஜைகள் செய்து சிறப்பு ஹோமம் செய்து கடம் புறப்பாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து கோயில் விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு செய்தனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி