தெங்கம்புதூரில் ₹28 லட்சத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மையம்

நாகர்கோவில், டிச.31: நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், தெங்கம்புதூர் உரக்கிடங்கு அருகே ₹28 லட்சத்தில், நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையம் கட்ட மேயர் மகேஷ் அடிக்கல் நாட்டினார். துணை மேயர்மேரி பிரின்சி லதா, கவுன்சிலர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ராஜா, திமுக மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் சேக் மீரான், ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், வட்ட செயலாளர்கள் ஜெய கிருஷ்ணன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குஞ்சன்விளையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மேயர் மகேஷ் மனுக்களை வாங்கினார். இதில் ஆணையர் ஆனந்த் மோகன், உதவி ஆணையர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை